மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை ரத்து
23-Apr-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2024 ஏப்., முதல் தற்போது வரை 11 பேருக்கு திருமண உதவித் தொகையாக ரூ.4 லட்சத்து 25 ஆயிரம், 88 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் கை, கால் குறைபாடு, காது கேளாதோர், பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகளை நல்ல நிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு திருமண உதவித்தொகை, திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் பட்டப்படிப்பு முடித்திருந்தால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம், 8 கிராம் தங்கம், பட்டப்படிப்பு முடிக்காதவராக இருந்தால் ரூ.25 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.மேலும் மாற்றுத்திறனாளியை மற்றொரு மாற்றுத்திறனாளி திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.இதன்படி ராமநாதபுரம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2024 ஏப்., முதல் தற்போது வரை 11 பேருக்கு திருமண உதவித் தொகையாக ரூ.4 லட்சத்து 25 ஆயிரம், 88 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
23-Apr-2025