மார்க்சிஸ்ட் பிரசார பயணம்
பரமக்குடி: பரமக்குடி மார்க்சிஸ்ட் சார்பில் மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தக் கோரி நேற்று வேந்தோணியில் துவங்கி பார்த்திபனுார் வரை டூவீலரில் பிரசார பயணம் மேற்கொண்டனர். வட்டார செயலாளர் தட்சிணாமூர்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவாஜி, ராஜா, நகர் செயலாளர் முனியசாமி பங்கேற்றனர்.