மேரா யுவா பாரத் ஒற்றுமை ஊர்வலம்
ராமநாதபுரம்: -: சர்தார் வல்லபாய் பட்டேல் 150 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மேரா யுவா பாரத் அமைப்பு சார்பில் 'ஏக் பாரத், ஆத்மநிர்பார் பாரத்' எனும் தலைப்பில் ஒற்றுமை ஊர்வலம் நடந்தது. தனியார் கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் துவங்கிய ஊர் வலம் அம்மா பூங்கா வரை நடந்தது. முன்னதாக மாவட்ட இளைஞர் அலுவலர் சம்யக் எச்.மேஷ்ரம் கூறியதாவது: சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டின் ஒற்றுமைக்கு அடித்தளமிட்ட தேசிய தலைவர். அவரது கனவுகளை நிறைவேற்ற இன்றைய இளைஞர்கள் தேசிய ஒற்றுமையையும், சமூக ஒத்துழைப்பையும் வளர்க்க வேண்டும் என்றார். இளைஞர்கள் கையில் தேசியக் கொடி ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். நிகழ்வின் ஒரு பகுதியாக ஜவஹர் சிறுவர் பள்ளி மாணவர்கள் சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்தில் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், பல்வேறு அமைப்புகளின் உறுப்பினர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.