உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பள்ளிகளில் இரவுநேர காவலாளிகள் இல்லை; போதிய பணியாளர் இன்றி துாய்மைப்பணி பாதிப்பு

அரசு பள்ளிகளில் இரவுநேர காவலாளிகள் இல்லை; போதிய பணியாளர் இன்றி துாய்மைப்பணி பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயர்நிலை, 71 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 11 பள்ளிகளில் மட்டுமே இரவு நேர காவலாளிகள் பணி புரிகின்றனர். முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் உட்பட இரவு நேர காவலாளிகள் இல்லாத நிலை தொடர்கிறது. இதனால் சி.இ.ஓ., அலுவலகம், அரசு பள்ளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதுபோன்று கல்வித்துறை சார்பில் 4 துாய்மைப் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் மூலம் துாய்மை பணி பெயரளவில் நடக்கிறது. இதனால் பள்ளிகளில் சுகாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது என பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பள்ளியின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், துாய்மையை கருத்தில் கொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் போதுமான துாய்மை பணியாளர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலகம், பள்ளிகளில் காவலாளிகள் நியமனம் செய்திட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !