பருவமழை விழிப்புணர்வு
திருவாடானை: வெள்ளையபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு வடகிழக்கு பருவமழை பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திருவாடானை தீயணைப்புத்துறை சார்பில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மழை, ஆபத்து காலங்களில் பாதுகாப்பது, பட்டாசு வெடிக்கும் முறை, சிலிண்டர் விபத்தில் தப்பிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டாக்டர் பிரவீன்ராஜ், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.