3000 மீனவ குடும்பங்களுக்கு தடைக்கால நிவாரணத் தொகை
தொண்டி: தொண்டி பகுதியில் எட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 3000 மீனவர் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளது.தமிழக கடலோர மாவட்டங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்பட்டது. இதில் விசைப்படகுகள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகையாக தலா 8000 ரூபாய் வழங்கப்படும். தொண்டி பகுதியில் பாசிபட்டினம், தாமோதரபட்டினம், கொடிப்பங்கு, தொண்டி 1, தொண்டி 2, சிங்காரவேலன் நகர், கண்கொள்ளாபட்டினம், காரங்காடு ஆகிய மீனவர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.இச்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 3000 மீனவர் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளதாக மீன்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.