உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மகப்பேறு வார்டு அருகே கொசு உற்பத்தி குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம்

மகப்பேறு வார்டு அருகே கொசு உற்பத்தி குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம்

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு வார்டு பின்புறம் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. இதனால் குழந்தைகளுக்கு நோய்தொற்று அபாயம் உள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் பின்புறம் மகப்பேறு மருத்துவதத்திற்கென தனி வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதேநேரத்தில் மகப்பேறு வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக அப்புறப்படுத்தாமல் அதன் பின்புறத்தில் தேங்கி கிடக்கிறது. இதனால் அவ்விடம் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதுகுறித்து தாய்மார்கள் கூறியதாவது: மகப்பேறு வார்டில் இரவில் கொசுக்கடி அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் வளாகத்திலும், கழிப்பறையிலும் மட்டும் கொசுக்கடி இருந்தது. நாளுக்குநாள் வார்டுக்குள்ளும் கொசுக்கடி இருப்பதால், குழந்தைகளுக்கு நோய்பரவி விடுமோ என்ற அச்சம் உள்ளது. மகப்பேறு வளாகத்தை சுற்றிலும் துாய்மையாக பராமரிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை