உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணியில் தெருநாய்களால் வாகன ஓட்டிகள், மக்கள் பாதிப்பு

திருப்புல்லாணியில் தெருநாய்களால் வாகன ஓட்டிகள், மக்கள் பாதிப்பு

திருப்புல்லாணி,: திருப்புல்லாணி சேதுக்கரை செல்லும் சாலையில் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் நீராட உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். குறிப்பாக அமாவாசை நாட்களில் முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க சேதுக்கரையில் குவிகின்றனர்.இந்நிலையில் திருப்புல்லாணி டவுனில் சேதுக்கரை சாலையில் தெருநாய்கள் கூட்டமாக திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இரவு நேரத்தில் வெளியே நடந்து செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.எனவே தெருநாய்களை பிடிக்கவும், அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் தடுப்பூசி செலுத்த திருப்புல்லாணி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை