மேலும் செய்திகள்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை
01-Nov-2024
உத்தரகோசமங்கை: -உத்தரகோசமங்கை அருகே இதம்பாடல் செல்லும் வழியில் மூன்று மாதங்களுக்கு முன்பு அமைத்த பாலம் சேதமடைந்ததால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.உத்தரகோசமங்கையில் இருந்து இதம்பாடல் மரியராயபுரம் விலக்கில் 3 மாதங்களுக்கு முன்பு சிறு பாலம் அமைக்கப்பட்டது. பாலத்தின் ஒரு பகுதியில் ஒரு அடி இறங்கியுள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து உத்தரகோசமங்கை வழியாக இதம்பாடல், சிக்கல் செல்லக்கூடிய கன்னியாகுமரி, நாகர்கோவில், துாத்துக்குடி, திருச்செந்துார் உள்ளிட்ட பஸ்கள் இந்த வழியாக செல்கின்றன. சரக்கு வாகனங்களும் டூவீலர் ஓட்டிகளும் இச்சாலை பிரதான சாலையாக பயன்படுத்துகின்றனர்.பாலத்தின் பக்கவாட்டு பகுதி சேதமடைந்து விபத்து அபாயத்துடன் உள்ளதால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி டூவீலர் ஓட்டிகள் அப்பகுதியில் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சிறு பாலத்தின் மேற்பகுதி சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் கற்களை வைத்து உள்ளனர். எனவே பாலத்தின் உறுதித் தன்மையை ஆராய்ந்து சேதமடைந்த பகுதியை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
01-Nov-2024