/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் வேகத்தடை தெரியாமல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கீழக்கரையில் வேகத்தடை தெரியாமல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கீழக்கரை : கீழக்கரை நகரில் வேகத்தடைகளில் வெள்ளை வண்ண கோடுகள் இல்லாதால் இரவுநேரத்தில் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர். கீழக்கரை நகரில் புதியதாக தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. பெரும்பாலான சாலைகளில் வேகத்தடைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை கண்டறிவதற்கான வெள்ளை ரிப்ளைக்டர் கோடுகள் இல்லாததால் இரவு நேரங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இரவு நேரங்களில் அப்பகுதியில் வெளிச்சம் இன்றி இருப்பதால் தடுமாறி கீழே விழுந்து காயமடைவது அப்பகுதியில் அதிகமானோர் எண்ணிக்கையில் தொடர்கிறது. வேகத்தடை உள்ள தார் சாலைகளில் வெள்ளை வண்ண ரிப்ளைக்டர் கோடுகளை முறையாக அடிக்க வேண்டும். அதற்கு கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.