உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டில் மழை நீர் வாகன ஓட்டிகள் அவதி

ரோட்டில் மழை நீர் வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை: தினையத்துார் அருகே மாவூர் செல்லும் விலக்கு ரோட்டில் மழை நீர் தேங்கியுள்ளது. அவ்வழியாக வாகனங்களில் செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர்.மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தினையத்துார் அருகே மாவூர் செல்லும் விலக்கு ரோட்டில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த ரோட்டை சீரமைப்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு மணல் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்டப்பட்டது. இதனால் ஏற்பட்ட பள்ளத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் ரோட்டில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர்கள் பாதிக்கபட்டுள்ளனர். நீரை அகற்றி ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவூர் கிராம மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ