உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வளையனேந்தல் - திருப்புல்லாணியில் தார் சாலையின்றி வாகன ஓட்டிகள் அவதி

வளையனேந்தல் - திருப்புல்லாணியில் தார் சாலையின்றி வாகன ஓட்டிகள் அவதி

கீழக்கரை: -கீழக்கரை அருகே திருப்புல்லாணி- வளையேனந்தல் சாலை குண்டும்குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். தார்சாலை அமைக்க வேண்டும்.திருப்புல்லாணியில் இருந்து வளையனேந்தல் வழியாக கீழக்கரை கிழக்கு கடற்கரை செல்லும் சாலை ஒரு கி.மீ., தொலைவிற்கு சேதம் அடைந்திருந்தது. முன்பு அச்சாலையில் அமைக்கப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதியதாக தார் சாலை அமைப்பதற்காக கிராவல் மண் சாலை அமைக்கப்பட்டது.தார்சாலை அமைக்காமல் கிராவல் மண் சாலையாக இருந்ததால் சமீபத்தில் பெய்த மழையால் செம்மண் கரைந்து குண்டும் குழியுமாக ஜல்லி மற்றும் சரளை கற்கள் பெயர்ந்து வருகிறது.எனவே திருப்புல்லாணி யூனியன் நிர்வாகத்தினர் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை