மேலும் செய்திகள்
கீழக்கரை மகா மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
12-Aug-2025
கீழக்கரை : கீழக்கரை அருகே ஸ்ரீ நகரில் உள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் ஓம் சக்தி கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் அர்ச்சனை, நாமாவளி, பஜனை, கும்மியாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. பெண்கள் பங்கேற்ற கஞ்சி வார்ப்பு மற்றும் சக்தி கலய ஊர்வலம் நடந்தது. பூஜைகளை மன்ற ஒருங்கிணைப்பாளர் பூங்கொடி தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். மாலையில் முளைப்பாரி ஊர்வலமாக சென்று பாரியை கங்கை சேர்த்தனர்.
12-Aug-2025