முனீஸ்வரர் கோயில் மஞ்சுவிரட்டு விழா
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே, புதுக்குறிச்சி தர்ம முனீஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு விழா நடந்தது. முன்னதாக, மூல வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடை பெற்றது. பின்னர், காளைகளின் கழுத்தில் வேஷ்டி, துண்டு உள்ளிட்ட பரிசு பொருட்கள் கட்டப்பட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை இளைஞர்கள் அடக்கி பரிசுகளை கைப்பற்றினர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.