உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முருக பக்தர்கள் மாநாடு: ராமேஸ்வரத்தில் வீடுவீடாக ஹிந்து முன்னணி அழைப்பு

முருக பக்தர்கள் மாநாடு: ராமேஸ்வரத்தில் வீடுவீடாக ஹிந்து முன்னணி அழைப்பு

ராமேஸ்வரம்: மதுரையில் ஜூன் 22ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணியினர் வீடு வீடாக சென்று மக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றனர்.ஜூன் 22-ல் மதுரையில்நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பு, வசதிகளை ஹிந்து முன்னணியினர் செய்து வருகின்றனர்.இந்நிலையில் இம்மாநாட்டில் பங்கேற்க தமிழக முழுவதும் மக்களிடம் ஹிந்து முன்னணி, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் நேரில் சந்தித்து வரவேற்கின்றனர். நேற்று ராமேஸ்வரத்தில்பல பகுதியில் ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் ஹிந்து அமைப்பினர்வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றனர். இம்மாநாட்டில் பங்கேற்போம் என மக்களும் உறுதி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை