/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயிலில் தமிழில் குடமுழுக்கு விழா பனைமரங்களை பாதுகாக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்
கோயிலில் தமிழில் குடமுழுக்கு விழா பனைமரங்களை பாதுகாக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை, வீரத்தமிழர் முன்னணி பிரிவு சார்பில் உத்தரகோசமங்கை கோயில் கும்பாபிேஷக விழாவை தமிழில் நடத்த வேண்டும். பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் வளனரசு, வீரத்தமிழர் முன்னணி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகன் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி, மங்களநாதர் கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும். பனைமரங்களை அரசு அனுமதியின்றி அச்சமின்றி தொடர்ந்து வெட்டி அழிக்கின்றனர். சிலர் மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.