பரமக்குடியில் இயற்கை சந்தை
பரமக்குடி : பரமக்குடி வாரச்சந்தையில் ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை சந்தை துவக்கப்பட்டது.இங்கு மகளிர் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. சந்தையை மகளிர் திட்ட இயக்குனர் சித்ரா துவக்கி வைத்தார். பரமக்குடி, நயினார்கோவில், போகலுார் ஒன்றியங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்களது தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், கீரை மற்றும் பழ வகைகளை விற்பனை செய்தனர். இதற்காக 10 ஸ்டால்களை அமைத்துள்ளனர். கண்காட்சியில் வாழ்வாதார உதவி திட்ட அலுவலர் அழகப்பன், டி.எஸ்.எம்.எஸ்., மேலாளர் தங்கபாண்டியன், வட்டார இயக்க மேலாளர் சந்திரபோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.