மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
16-Aug-2025
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழா செப்.,21ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு குருக்கள் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. இதனை தொடர்ந்து 11 நாட்கள் விழா நடக்கும். முதல் நாளான செப்.,22ல் அம்மன் முத்தங்கி சேவை அலங்காரத்திலும், 2ம் நாள் அன்னபூரணி, 3ம் நாள் மகாலட்சுமி, 4ம் நாள் சிவதுர்க்கை, 5ம் நாள் சரஸ்வதி, 6ம் நாள் கவுரி சிவபூஜை, 7ம் நாள் சாரதாம்பிகை, 8ம் நாள் கஜலட்சுமி, 9ம் நாள் மகிஷாசுரமர்த்தினி, 10ம் நாள் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். 11ம் நாள் விஜயதசமியில் பர்வதவர்த்தினி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி வன்னிநோம்பு தரவையில் அம்பு எய்தி அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்லதுரை செய்து வருகிறார்.
16-Aug-2025