உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் செப்.23 முதல் நவராத்திரி உற்ஸவம்

ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் செப்.23 முதல் நவராத்திரி உற்ஸவம்

திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி உற்ஸவ விழா விமரிசை யாக கொண்டாடப் படுகிறது. செப்.,23 காலை அலங்கார கொலு மண்டபத்தில் பல்வேறு வகையான வன உயிரினம் மற்றும் அடியார்கள், தெய்வங் களின் சிலைகள் கொலு பொம்மை ஆக வைக்கப்படுகிறது. தொடர்ந்து பத்து நாட்களும் பத்மாஸனி தாயா ருக்கு விசேஷ திருமஞ்சனம் சாற்று முறை கோஷ்டி பாராயணம் மற்றும் இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம் நடக்கிறது. விஜயதசமி அன்று கல்யாண ஜெகநாத பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து அம்பு எய்தும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சரக பொறுப்பாளர் கிரிதரன், திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ