உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நெறிஞ்சிப்பட்டி கிராம மக்கள் கமுதி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

நெறிஞ்சிப்பட்டி கிராம மக்கள் கமுதி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

கமுதி: கமுதி அருகே நெறிஞ்சிப்பட்டி கிராம மக்கள் கிராமத்தில் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி கமுதி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கமுதி அருகே நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மாணவர்கள், பணியாளர்கள் அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் கட்டடம் கட்ட வேண்டிய இடத்தில் சிலர் ஆக்கிரமித்துள்ள நிலையில் மீட்டுத் தர வலியுறுத்தி நெறிஞ்சிப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கமுதி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை யிட்டனர். பின் போலீசார், ஒன்றிய அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆக.,25ல் போலீசார் முன்னிலையில் வருவாய்துறையினர் நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை