புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
ராமநாதபுரம்; ராமநாதபுரம் சேதுபதி லயன்ஸ் சங்கத்தின் 2025-26ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட கவர்னர் சுந்தரராஜன் புதிய நிர்வாகிகளை பதவி அமர்த்தினார்.புதிய தலைவர் சிவராஜ் ஏற்புரை வழங்கினார். கேபினட் வனமூர்த்தி, புதிய உறுப்பினர்கள் கோபால், பாலமுரளி சங்கத்தில் இணைந்தனர். ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சேவைத் திட்டங்களை துவக்கி வைத்தர். மாவட்ட தலைவர் முகமது உமர், மண்டலத்தலைவர் டாக்டர் வரதராஜ், உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொருளாளர் ஜெயராஜ் நன்றி கூறினார்.