புதிய கட்டடம் திறப்பு விழா
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம்அருகே ஏ.ஆர்.மங்கலம் பகுதியில் ரேஷன் கடைக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் திறந்து வைத்தார். பி.டி.ஓ.,க்கள் கிருஷ்ணன், லிங்கம், காங்., வட்டார தலைவர் சுப்பிரமணியன், தி.மு.க., நிர்வாகிகள் சேகர், வெங்கடாசலபதி, நேரு, போஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.