மேலும் செய்திகள்
கடத்தப்பட்ட ஆம்புலன்ஸ் கோடம்பாக்கத்தில் பரபரப்பு
01-Jun-2025
திருவாடானை: கால்நடை ஆம்புலன்ஸ்க்கு ஆறு மாதமாக டாக்டர் இல்லாததால் கால்நடைகள் இறப்பு அதிகரித்துள்ளது. கால்நடை வளர்ப்போர் வசதியை கருத்தில் கொண்டு கால்நடைகள் இருக்கும் இடத்திலேயே அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு சார்பில் நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் இலவச சேவை துவங்கப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ்சில் தேவையான அனைத்து அத்தியாவசிய கருவி, உபகரணம்,மருந்து ஆகியவை இருக்கும். ஒரு கால்நடை மருத்துவர், உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் இருப்பர். நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில்ஏற்ற ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் 1962 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அழைத்தால் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். அதனை தொடர்ந்து, அவசர உதவி தேவைப்படும் இடத்துக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும். இத்திட்டம் பயனுள்ளதாக அமைந்துஉள்ளதால் நோயால் பாதிக்கப்பட்ட ஆடு, மாடுகளுக்கு பயனுள்ளதாகஇருந்தது. இந்நிலையில் திருவாடானையில் இயங்கி வந்த ஆம்புலன்சுக்கு ஆறு மாதத்திற்கு மேலாக கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதால் வாகனம் திருவாடானை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்.பி.பட்டினம் மக்கள் கூறுகையில், சில மாதங்களுக்கு முன் பசுமாடு கன்று ஈன முடியாமல் வயல்காட்டில்இருந்தது. அங்குள்ள இளைஞர்கள் 1962ல் தொடர்பு கொண்டனர். மண்டபம் கால்நடை ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்தபோதும் கன்று இறந்து விட்டது. நீண்ட தொலைவில் இருந்து டாக்டர் வர தாமதமானதால் இந் நிலை ஏற்பட்டது. எனவே கால்நடைகளுக்கு உடனே சிகிச்சை அளிக்கும் வகையில் திருவாடானை கால்நடை ஆம்புலன்சுக்குடாக்டர் நியமிக்க வேண்டும் என்றனர்.
01-Jun-2025