உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எச்சரிக்கை பலகை இல்லை

எச்சரிக்கை பலகை இல்லை

ஆர்.எஸ்.மங்கலம்: தேசிய நெடுஞ்சாலை மங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனில் எச்சரிக்கை பலகை இல்லாததால் இரண்டு ஆண்டுகளாக விபத்துக்கள் தொடரும் நிலையில் கண்டு கொள்ளாத நிலை தொடர்கிறது.திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை,ஆர்.எஸ்.மங்கலம் அருகே மங்கலம் பகுதியில் ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோட்டின் நடுவில் சென்டர் மீடியன் உள்ளது குறித்து வெளியூர் பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்டர் மீடியன் இரு பக்கமும் முகப்பு பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளோ, இரவில் ஒளிரும் விளக்குகளோ பொருத்தப்படாத நிலை உள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் வாகன ஓட்டிகள் சென்டர் மீடியன் இருப்பது தெரியாமல் இரவில் சென்டர் மீடியன் மீது மோதி விபத்துகளில் சிக்குகின்றனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து அப்பகுதியில் சென்டர் மீடியனால் விபத்துக்கள் நடக்கின்றன. இப்பகுதியில் வாகன விபத்துக்கள் குறித்து நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிந்தும், விபத்துக்களை தடுக்க எச்சரிக்கை பலகைகளை அமைப்பதற்கோ, விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதற்கோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை உள்ளது.வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட வாகன ஓட்டிகள் விபத்துக்களில் பாதிக்கப்படுவது தொடர்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மங்கலம் பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் ஒளிரும் விளக்குகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை