உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு மருத்துவமனையில் பெயரளவில் தண்ணீர் வசதி: நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனையில் பெயரளவில் தண்ணீர் வசதி: நோயாளிகள் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அன்றாட தேவைக்கு கூட போதுமான அளவில் தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தற்போது மருத்துக்கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுஉள்ளது. இருப்பினும் குடிநீர், கழிப்பறை, குப்பை அகற்றம், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெயரளவில் உள்ளதாக நேயாளிகள், மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக வார்டுகளுக்கு வெளியே உள்ள கழிப்பறைகளில் சரிவர தண்ணீர் வருவது இல்லை. வெளியே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்திலும் குடிநீர் பெயரளவில் வருகிறது. நுாற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் கழிப்பறைகளில் போதுமான அளவு தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.சுத்திகரிப்பு மையத்தில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி