உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமேஸ்வரம் அருகே தீர்த்தத்தில் அசைவ உணவு விளம்பர பலகை

 ராமேஸ்வரம் அருகே தீர்த்தத்தில் அசைவ உணவு விளம்பர பலகை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் வில்லுாண்டி தீர்த்தத்தில் அசைவ உணவுக்கான விளம்பர பலகை வைத்துள்ளதற்கு ஹிந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கச்சிமடம் ஊராட்சி தண்ணீர்ஊற்று கிராமத்தில் கடற்கரையில் உள்ள வில்லுாண்டி தீர்த்தம் ராமாயண வரலாற்றில் தொடர்புடையது. இலங்கையில் இருந்து சீதையை ராமர் மீட்டு வரும் போது சீதைக்கு தாகம் எடுத்ததால் ராமர் கடலில் அம்பு எய்து அதில் இருந்து பீறிட்டு வந்த தண்ணீரை பருகியதாக ராமாயண வரலாற்றில் கூறப்படுகிறது. இதனால் இதற்கு வில்லுாண்டி தீர்த்தம் என பெயரிட்டனர். இந்த தீர்த்தம் கடற்கரையில் இருந்து 60 மீ.,ல் கடலுக்குள் உள்ளதால் இங்கு மண்டபம் ஒன்றிய நிர்வாகம் பாலம் அமைத்தனர். இப்பாலம் வழியாக தினமும் ஏராளமான பக்தர்கள் நடந்து சென்று தீர்த்தத்தை வாளியில் இறைத்து பருகி தரிசிக்கின்றனர். புனிதமான இத்தீர்த்தம் செல்லும் நுழைவுப் பகுதியில் தனியார் ரிசார்ட் உரிமையாளர் அசைவ உணவுக்கான விளம்பர பலகையை வைத்துள்ளார். இது பக்தர்களை முகம்சுளிக்க செய்தது. புனித தீர்த்தத்தை களங்கப்படுத்தி அசைவ உணவுக்கு விளம்பரப்படுத்திய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து விளம்பர பலகையை அகற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம் என ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை