உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வடகிழக்கு பருவமழை துவக்கம்: எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

வடகிழக்கு பருவமழை துவக்கம்: எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

திருவாடானை: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்குமாறு மின்வாரிய அலுவலர்கள் அறிவுறுத்தினர். திருவாடானை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி கூறியதாவது: திருவாடானை தாலுகா வில் திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்துார், உப்பூர், நகரிகாத்தான் ஆகிய 6 துணை மின்நிலையங்கள் உள்ளன. இப்பகுதியில் மின் கம்பங்கள் சேத மடைந்து இருந்தாலோ, மின் கம்பிகள் தொய்வாக இருந்தாலோ, தொட முயற்சிக்காமல் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். மின் தடையை சரிசெய்ய மின்வாரிய பணியாளர் அல்லாதவர்கள் மின் கம்பத்தில் ஏறக்கூடாது. மின் தடை ஏற்பட்டால் அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் தெரிவித்து மின்வாரிய பணியாளர் மூலம் மட்டுமே மின்தடையை சீரமைக்க வேண்டும். கால்நடைகளை மின் கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கட்டக்கூடாது. வைக்கோல் போன்ற அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்கள் மின் கம்பிகளுக்கு கீழே இயக்குவதை தவிர்க்க வேண்டும். மின்கம்பத்தில் உள்ள ஸ்டே கம்பியின் மீது கொடி கயிறு கட்டி துணி காயவைக்க கூடாது. இடி அல்லது மின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், அலைபேசியை பயன்படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் நிற்கக்கூடாது. குளியலறை, கழிப்பறை மற்றும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளைப் பொருத்தக்கூடாது. மின்கம்பிகளை உரசும் மரக்கிளைகளை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்களை அணுகலாம். அவசர கால இடர்பாடுகள் தொடர்பாக மின்னகம் எண் 94987 94987 என்ற அலைபேசியில் தெரி விக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை