உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / என்.எஸ்.எஸ்., திட்ட முகாம்

என்.எஸ்.எஸ்., திட்ட முகாம்

ராமநாதபுரம் : முகம்மதியா மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டக்குழு (என்.எஸ்.எஸ்.,) சார்பில் சித்தார்கோட்டை ஊராட்சியில் முகாம் நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் என்.எஸ்.எஸ்.,ல் மாணவர்களின் பங்கு என்ன. அதை எவ்வாறு செயல்படுத்தலாம் என அறிவுரை வழங்கினார்.உடன் என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன், முகாம் அலுவலர் முஹம்மது சலீம், முகம்மதியா மேல்நிலைப்பள்ளி இடைநிலை உதவி தலைமை ஆசிரியர் முகம்மது சுகைப், தமிழாசிரியர் செய்யது இப்ராகிம், உடற்கல்வி ஆசிரியர் அஜீஸ் கனிஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !