/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பராமரிப்பு இல்லாத யூனியன் அலுவலகம் நுழைவு வாயிலில் வளரும் கருவேல மரங்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பராமரிப்பு இல்லாத யூனியன் அலுவலகம் நுழைவு வாயிலில் வளரும் கருவேல மரங்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திருப்புல்லாணி: திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகம் பராமரிப்பு இன்றி நுழைவு வாயில் பகுதியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்திற்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் யூனியன் அலுவலக வளாகம் தொடர் பராமரிப்பு இன்றி நுழைவுப்பகுதியின் இருபுறங்களிலும் வைத்த மரக்கன்றுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாறாக கருவேல மரங்கள், செடி,கொடி வளர்ந்து புதர்மண்டியுள்ளது. இதனை பார்த்து பார்க்காதது போல அதிகாரிகள் உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்றி அவ்விடத்தில் புதிதாக மரக்கன்றுகள் நட்டு தொடர்ந்து பராமரிக்க யூனியன் அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.