மேலும் செய்திகள்
மாநில ஹாக்கி போட்டியில் தங்கம்
19-Nov-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் செவிலியர் பள்ளியில் 'நைட்டிங்கேல்' நினைவாக விளக்கேற்றி, மாணவிகள் அனைவரும் உறுதிமொழியேற்றனர். கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் ஜூலி நேசமணி முன்னிலை வகித்தார். ஆசிரியை ஜெயஸ்ரீ வரவேற்றார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் நுார் முகமது 'நைட்டிங்கேல்' சேவைகள் குறித்து விரிவாக பேசினார். போரில் காயமடைந்த வீரர்களுக்கு மெழுகுவர்த்தி உதவிக்கொண்டு மருத்துவ உதவி செய்தார். அவரை நினைவுகூறும் வகையில் முதலாம் ஆண்டு மாணவிகள் விளக்கு ஏற்றி உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்ச்சியில் செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர்கள் ராசிகா அப்துல்லா, அட்டிப்அப்துல்லா, ஷிபா பாபு, பாத்திமா ஷானாஸ், ரஜாஸ் அப்துல்லா, ஆயிஷத்துல் நஷிதா உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை தாரணி நன்றி கூறினார்.
19-Nov-2025