உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் மற்றும் கருப்பட்டி உள்ளிட்டவைகள் மருத்துவ குணம் வாய்ந்தவை. பனை ஓலையில் இருந்து செய்யக்கூடிய கலைநய பொருட்கள் மூலம் அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது.சாயல்குடி சுற்றுவட்டார 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 40 முதல் 80 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மரங்கள் இன்று வரை பயன் தந்து கொண்டிருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலுக்காக அடர்ந்து வளர்ந்துள்ள விளை நிலங்களில் பனை மரத்தை அழிக்கும் போக்கு வெகுவாக நிகழ்கிறது.சாயல்குடியைச் சேர்ந்த பனை தொழிலாளர் நல வாரிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.பெத்தராஜ் கூறியதாவது: பனை மரத்தின் அனைத்து பொருள்களும் நன்மை தரக்கூடியதாகும். வியாபார நோக்கிலும் பனை மரத்தை அழிக்கும் எண்ணம் கொண்டவர்களால் பனை மரத்தின் மேல் பகுதி மற்றும் அடிப்பகுதியில் ஆசிட் மற்றும் கேடு விளைவிக்கும் ரசாயனத்தை ஊற்றுகின்றனர்.இதனால் விரைவில் மரம் பட்டுப் போவதால் நாங்கள் பட்டுப்போன மரத்தையே அழிக்கிறோம் என்ற காரணத்தை கூறி அழிக்கும் போக்கு தொடர்கிறது.தற்போது 40 வயதிற்கு மேல் உள்ளவர்களே பதநீர் இறக்கி வருகின்றனர். தற்போதுள்ள இளைஞர்களுக்கு பனை சார்ந்த விஷயங்களும் பனைமரம் ஏறி தொழில் செய்வதிலும் ஆர்வம் குறைவாக உள்ளது.இதே நிலை தொடர்ந்தால் கருப்பட்டிக்கு பிரசித்தி பெற்ற இப்பகுதியில் பனை சார்ந்த உற்பத்தி பொருள்களின் தாக்கம் வெகு விரைவில் அழிவை சந்திக்கும் நிலை உள்ளது.எனவே கடலாடி வருவாய்த்துறையினர், வனத்துறையினர், போலீசார் ஒன்றிணைந்து செயல்பட்டு, பலன் தரும் பனைமர அழிவை தடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை