உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வைகையில் தேங்கும் கழிவு நீர் கண்டுகொள்ளாத அதிகாரிகள் நிலத்தடி நீர், பாசனம் பாதிக்கும் அபாயம்

வைகையில் தேங்கும் கழிவு நீர் கண்டுகொள்ளாத அதிகாரிகள் நிலத்தடி நீர், பாசனம் பாதிக்கும் அபாயம்

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கும் நிலையில் எந்த துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால் விவசாயிகள், மக்கள் திகைப்பில் உள்ளனர். இதனால் நிலத்தடி நீர் பாதிப்பதுடன் பாசனம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி. ஜூன் 25ல் 63.09 அடியாக இருந்தது. மாவட்ட வைகை பூர்வீக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், வினாடிக்கு 3000 கன அடி வீதம் ஆற்றின் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.ஜூன் 25ல் வைகை பூர்வீக பாசனப்பகுதி 2, 3ல் உள்ள பாசன கண்மாய்களுக்கு 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்லும்.பரமக்குடி உட்பட ஆற்றில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி குட்டைகள் உருவெடுத்துள்ளது. கழிவு நீரை முறைப்படுத்த அதிகாரிகள் தவறிய சூழலில் அருகில் உள்ள ஆழ் குழாய்களில் நிலத்தடி நீர் மாசுபட்டு அதனை பயன்படுத்துவோர் தொற்றுக்கு ஆளாகின்றனர்.தற்போது வைகையில் தண்ணீர் வரும் சூழலில் அனைத்து கழிவுகளும் பெரிய கண்மாயை நோக்கி செல்லும். இதனால் பாசனத்திற்கு பயன்படுத்தும் நீரின் தன்மை கெட்டு விடும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.வைகையில் கலக்கும் கழிவு நீரை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள், அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை