உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூட்டுறவு வங்கி வளாகத்தில் இருக்கை அமைத்த அதிகாரிகள்

கூட்டுறவு வங்கி வளாகத்தில் இருக்கை அமைத்த அதிகாரிகள்

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதுகுளத்துார் கிளை வளாகத்தில் கூடாரம் அமைத்து பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டது.ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதுகுளத்துார் கிளை தாலுகா அலுவலகம் அருகே செயல்படுகிறது. வங்கியில் போதுமான இருக்கை வசதி இல்லாததால் மக்கள் வெளியில் மரத்தடியில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக செய்தி வெளியான அன்றே வங்கி பணியாளர்கள் வளாகத்தில் கூடாரம் அமைத்து தற்காலிக பிளாஸ்டிக் சேர்கள் போட்டனர்.வங்கிக்கு வரும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை