பஸ்ஸ்டாண்டில் பழைய அட்டவணை மாற்றம்
முதுகுளத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் பழைய அட்டவணை மாற்றப்பட்டு புதிய பஸ் கால அட்டவணை எழுதப்பட்டது.முதுகுளத்துாரில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை, ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை, கும்பகோணம், விருதுநகர், திருச்செந்துார், சிதம்பரம் உட்பட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. முதுகுளத்துாரை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பஸ்களில் பயணிக்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முந்தைய பஸ் கால அட்டவணை எழுதப்பட்டிருந்தது. இதனால் காத்திருக்கும் வெளியூர் பயணிகள் பஸ் நேரம் தெரியாமல் சிரமப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் பழைய கால அட்டவணை நீக்கப்பட்டு புதிய கால அட்டவணை எழுதப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.