உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதிய கட்டடங்கள் திறப்பு

புதிய கட்டடங்கள் திறப்பு

பரமக்குடி : பரமக்குடி அருகே மேலாய்க்குடி ஊராட்சி தேவரேந்தல் கிராமத்தில் நாடக மேடை, காட்டுப்பரமக்குடி பகுதியில் பஸ்ஸ்டாப் நிழற்குடை, நென்மேனி கிராமத்தில் ரேஷன் கடை என திறக்கப்பட்டது. பரமக்குடி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தலா 8 லட்ச ரூபாய் வீதம், ரூ.24 லட்சத்தில் பணிகள் நிறைவு பெற்று எம்.எல்.ஏ., முருகேசன் திறந்து வைத்தார்.இதில் ஊராட்சி தலைவர் காளிமுத்து, நகராட்சி தலைவர் சேதுகருணாநிதி, துணை தலைவர் குணா, கவுன்சிலர் ராதா, தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணி உதயகுமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி