உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனுஷ்கோடி கடல் பகுதியில் காற்றாலை அமைக்க எதிர்ப்பு

தனுஷ்கோடி கடல் பகுதியில் காற்றாலை அமைக்க எதிர்ப்பு

ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மைக்குழு ஆலோசனை கூட்டம் கடந்த 20ல் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். பிரிட்டன் வெளியுறவுத்துறை ஹை கமிஷன் அதிகாரிகள், மீன்வளத் துறை, வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட 18 துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.மீனவர்கள் தரப்பில், தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சின்னத்தம்பி, நாட்டுப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் ராயப்பன் பங்கேற்றனர்.சின்னத்தம்பி கூறியதாவது:கடல் பகுதியில் காற்றாலை அமைக்கும் பட்சத்தில் சூற்றுச்சூழல் பாதிக்கப்படும். தனுஷ்கோடி கடல் பகுதி, ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இடம். இங்கு பாறைகளை போட்டுள்ளதால், ஆமைகள் வருவது குறைந்து வருகிறது.காற்றாலை அமைத்தால் அதில் ஏற்படும் சத்தத்தால் கடல்வாழ் உயிரினங்கள் அச்சமடைந்து இடம்பெயரும் நிலை ஏற்படும். இங்கு இனப்பெருக்கத்திற்காக வரும் பிளமிங்கோ பறவைகள் காற்றாலைகளால் பாதிக்கப்படும். பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் கரைவலை மீன்பிடிப்பு தொழில் முற்றிலுமாக பாதிக்கப்படும்.தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை கடல் சீற்றம் அதிகம் உள்ள பகுதி என்பதால், காற்றாலைகள் பாதிக்கப்படும். கடற்கரையில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பிசாசு முனைப்பகுதியில் காற்றாலைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன; அந்த இடத்தில் காற்றாலைகள் அமைக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ