உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துார் அருகே செயின் பெல்ட் வாகனம் பயன்படுத்தி நெல் அறுவடை

முதுகுளத்துார் அருகே செயின் பெல்ட் வாகனம் பயன்படுத்தி நெல் அறுவடை

முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்வநாயகபுரம் அருகே செயின் பெல்ட் அறுவடை இயந்திரம் பயன்படுத்தி நெல் அறுவடை செய்யப்பட்டது.முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக நடப்பு ஆண்டில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நெல் விவசாயம் செய்திருந்தனர். பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஏராளமான கிராமங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகியது. தற்போது வரை வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். பல பகுதிகளில் நெல்மணிகள் மீண்டும் முளைத்தது. முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் செயின் பெல்ட் அறுவடை இயந்திரத்தில் நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.3000 வாடகை கொடுத்து அறுவடை செய்தும் பயனில்லை. அறுவடை வாகனத்திற்கு கூட பணம் கொடுக்க முடியாத அளவிற்கு உள்ளது. வேறு வழியின்றி நஷ்டத்தோடு நஷ்டமாக அறுவடை செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு விதைப்புக்கு கூட நெல் கிடைக்கவில்லை. அறுவடை வாகனத்திற்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் சிலர் அறுவடை செய்யாமல் விட்டுள்ளனர். எனவே மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ