உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயிலில் இன்று கட்டண தரிசனம் ரத்து

ராமேஸ்வரம் கோயிலில் இன்று கட்டண தரிசனம் ரத்து

ராமேஸ்வரம்:இன்று ஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கோயிலில் மாசி, ஆடி, புரட்டாசி மகாளய அமாவாசை நாளில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்தம், கோயில் வளாகத்தில் 22 தீர்த்தங்களில் நீராடுவர். கூட்ட நெரிசலில் சிரமத்துடன் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வர். இந்த நெரிசலை தவிர்க்க தமிழக அரசு முக்கிய விழா நாளில் கட்டண தரிசன முறையை ரத்து செய்வதாக தெரிவித்தது. அதன்படி ஆடி அமாவாசையான இன்று ராமேஸ்வரம் கோயிலில் ரூ.100, ரூ. 200 கட்டண தரிசனம் ரத்து செய்வதாகவும், பக்தர்கள் அனைவரும் பொது தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி