உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பசுமை இயக்கம் சார்பில் பனை விதை நடும் பணி

பசுமை இயக்கம் சார்பில் பனை விதை நடும் பணி

ஆர்.எஸ்.மங்கலம் : தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத்துறை, தமிழ்நாடு பசுமை இயக்கம், தன்னார்வலர்கள் அமைப்பு உள்ளிட்டோர் இணைந்து 6 கோடி பனை விதைகள் நடும் பணி மாவட்ட வாரியாக நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் சித்துார்வாடி, வெட்டுக்குளம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் 5000 பனை விதைகள் நடும் பணி நடை பெற்றது. ஆர்.எஸ்.மங்கலம் வனச்சரக அலுவலர் அப்துல் ரகுமான், தன்னார்வலர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது ஜலாவுதீன், வனகர்கள் சந்திரன், ரஹீம், ரவி, சதீஷ்குமார் உட்பட பள்ளி மாணவர்களும், தன்னார்வலர்களும் திரளாக கலந்து கொண்ட னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை