பெரிய கண்மாய் கரையில் பனை விதை நட வேண்டும்
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் 20 கி.மீ., நீண்ட கரையைக் கொண்டது. இந்த கண்மாய் கரையில் பல ஆண்டுகளாக ஏராளமான பனை மரங்கள் இருந்து வந்ததால் மண்ணரிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பனை மரங்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் சீமைக்கருவேல மரங் களின் ஆக்கிரமிப்பாலும், பெரும்பாலான பனை மரங்கள் அழிந்து விட்டன. கண்மாய் கரையில் ஆங்காங்கே காட்சி பொருளாக மட்டுமே சில பனை மரங்கள் உள்ளன. எனவே கண்மாய் கரையில் மண் அரிப்பை தடுக்கும் விதமாகவும், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையிலும், கண்மாய் கரைகளில் பனை கொட்டைகளை நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் வலியுறுத்தினர்.