உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் புதிய பால திறப்பு விழா ஒத்திகை

பாம்பன் புதிய பால திறப்பு விழா ஒத்திகை

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இன்று (மார்ச் 29) திறப்பு விழா ஒத்திகை நடக்க உள்ளதால், மீனவர்கள் படகுடன் கடந்து செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.ஏப்.,6ல் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அன்று மதியம் 12:45 மணிக்கு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் நின்றபடி கொடியசைத்து தாம்பரம்- ராமேஸ்வரம் புதிய ரயில் போக்குவரத்தை துவக்கி வைக்கிறார். மேலும் புதிய, பழைய ரயில் பாலத்தின் இரு துாக்கு பாலம் திறந்ததும், இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல் கடந்து செல்வதை பார்வையிட உள்ளார். இதற்கான ஒத்திகை இன்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்க உள்ளது. இச்சமயத்தில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் பாலத்தை கடந்து செல்ல வேண்டாம்.மீறினால் மீன்வளத்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ