உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் புதிய ரயில் பாலம் அடுத்த மாதம் திறப்பு: தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

பாம்பன் புதிய ரயில் பாலம் அடுத்த மாதம் திறப்பு: தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நவம்பரில் (அடுத்தமாதம்) நடக்கும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்தார்.பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு நேற்று ஆர்.என்.சிங் சிறப்பு ரயில் பெட்டியில் வந்தார். பின் கட்டுமானப் பணிகள், துாக்கு பாலம் திறந்து மூடுவது குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது :பாம்பன் புதிய ரயில் பாலத்தில் கட்டுமானம், துாக்கு பாலம் பொருத்தும் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. அடுத்த வாரம் இங்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளார். நவம்பரில் புதிய பாலம் திறப்பு விழா நடக்க உள்ளது.இப்பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயர் வைப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும். ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் கட்டுமானப் பணி தொடர்ந்து நடக்கிறது. பழைய ரயில் துாக்கு பாலத்தை புராதான சின்னமாக வைத்து பராமரிக்க சாத்திய கூறுகள் உள்ளதா என ரயில்வே பொறியாளர்களுடன் ஆலோசிக்கப்படும். இல்லையெனில் பழைய பாலம் அகற்றப்படும் என்றார்.மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ