உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் திறக்கப்பட்டு ஆய்வு

பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் திறக்கப்பட்டு ஆய்வு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் திறந்து மூடுவதை தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அலுவலர் கணேஷ் ஆய்வு செய்தார்.பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலதை ஏப்., 6ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அன்று முதல் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட வெளி மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. இப்பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் 72.5 மீ., நீளம் உள்ளது. ஆசியாவிலே லிப்ட் முறையில் இயக்கப்படும் ஒரே ரயில் பாலம் இதுதான். நேற்று மாலை ராமேஸ்வரம் வந்த தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அலுவலர் கணேஷ் பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்தார். பின் துாக்கு பாலத்தை திறந்து மூடச் செய்து அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து தெற்கு ரயில்வே மின்பிரிவு தலைமை பொறியாளர் ஸ்ரீ சோமேஸ்குமார், பாலம் பராமரிப்பு பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை