உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊராட்சி செயலர் எழுச்சி நாள் விழா

ஊராட்சி செயலர் எழுச்சி நாள் விழா

கமுதி; கமுதி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் சார்பில் ஊராட்சி செயலர் சங்கத்தின் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் ஜெயபாரதன், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் செந்தாமரை, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.கமுதி சாயல்குடி ரோடு அரண்மனை மேடு அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், அபிராமம் நேசக்கரங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கமுதி ஒன்றிய தலைவர் குருமூர்த்தி, செயலாளர் செல்வம், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட ஊராட்சி செயலாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி