உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திறக்கப்பட்ட புதிய கழிப்பறை பயன்பாட்டிற்கு வராதது ஏனோ பரமக்குடி பயணிகள் கேள்வி

திறக்கப்பட்ட புதிய கழிப்பறை பயன்பாட்டிற்கு வராதது ஏனோ பரமக்குடி பயணிகள் கேள்வி

பரமக்குடி : பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் துாய்மை இந்தியா திட்டத்தில் திறக்கப்பட்ட பொது கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டப்பட்டுள்ளதால் திறக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, ராமேஸ்வரம் சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களுக்கு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் வசதி உள்ளது. 30க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சேலம், சென்னை என தொலைதுார பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஏராளமான பயணிகள் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் பொது, கட்டணக் கழிப்பறை செயல்படுகிறது. அவை அவ்வப்போது இயங்காத சூழலில் மக்கள் இயற்கை உபாதைக்கு தவிக்கின்றனர்.பழைய சுகாதார வளாகம் இடிக்கப்பட்டு புதிய வளாகம் கட்டப்பட்டது.இங்கு ஒரு மாதத்திற்கு முன்பு துாய்மை இந்தியா திட்டம் 2.0 என்ற பெயரில் ரூ.34 லட்சத்து 50 ஆயிரத்தில் பொது கழிப்பறை திறக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராமல் கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. இதனால் முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள் தவிக்கின்றனர். கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை