மேலும் செய்திகள்
வட்டு எறிதலில் முதலிடம்
29-Oct-2024
பரமக்குடி : பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மினு சஞ்சனா தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.நாட்டின் 65வது குடியரசு தின விழா மாநில தடகளப் போட்டிகளில் பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 19 வயது பிரிவில் மாணவி மினு சஞ்சனா ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கம், குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.இதையடுத்து அவர் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதிப் பெற்றார். தலைமை ஆசிரியை சரோஜா, உடற்கல்வி இயக்குனர் மணிமேகலை, உடற்கல்வி ஆசிரியர்கள் குழந்தை தெரேசா, பாரதி ஞான ராணி, எலிசபெத் ராணி, ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
29-Oct-2024