மேலும் செய்திகள்
ரிஷப வாகனத்தில் கவுரி அம்மன்
24-Oct-2025
பரமக்குடி: பரமக்குடி கேதார கவுரீஸ்வரி அம்பிகை கோயில் நோன்பு விழாவில் நிறைவு நாளில் அனந்த சயன திருக்கோலத்தில் அம்மன் பட்டு பல்லக்கில் வீதி உலா வந்தார். கோயிலில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 நாள் நோன்பு விழா நடக்கிறது. இந்த ஆண்டு நோன்பு விழா அக்., 20 துவங்கிய நிலையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையொட்டி காலை உற்ஸவ சாந்தி, பாலபிஷேகம், இரவு பட்டு பல்லக்கில் அனந்த சயன கோலத்தில் அம்மன் வீதி வலம் வந்தார். தொடர்ந்து பக்தர்கள் நோன்பை நிறைவு செய்தனர். ஏராளமானோர் அம்மனை தரிசித்தனர்.
24-Oct-2025