பரமக்குடி நகர் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
பரமக்குடி: பரமக்குடி நகர் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா தலைமையில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் முத்தையா, சதன் பிரபாகர், மாநில சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் ஜமால் முன்னிலை வகித்தனர். விவசாய அணி மாவட்ட செயலாளர் வடமலை வரவேற்றார். மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா பேசினர். அப்போது பரமக்குடிக்கு ஜூலை 30 வருகை தரும் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு வரவேற்பு அளிப்பது, ரோடு ஷோ நடத்துவது உள்ளிட்டவை குறித்து பேசினர். தொடர்ந்து நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா தனது சொந்த நிதி ரூ. 5 லட்சத்தை நகர் தொண்டர்களின் மருத்துவம், திருமணம் உள்ளிட்டவைகளுக்கு கட்சி வளர்ச்சி நிதியாக வழங்கினார். தொகுதி பொறுப்பாளர் ராஜா வர்மன், ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளர் பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு தொண்டர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.