உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தேசிய கராத்தே போட்டிக்கு பரமக்குடி மாணவன் தேர்வு

 தேசிய கராத்தே போட்டிக்கு பரமக்குடி மாணவன் தேர்வு

பரமக்குடி: பரமக்குடி தனியார் பள்ளி மாணவன் தேசிய கராத்தே போட்டிக்கு இரண்டாவது முறையாக தேர்வு பெற்றுள்ளார். 2025 --26ம் ஆண்டிற்கான 69வது இந்திய பள்ளிக் கல்வி குழுமம் சார்பில் ஈரோட்டில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது. இதில் பரமக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவன் மனோபாலாஜி 19 வயதுக்கு உட்பட்ட 62 கிலோ எடைப்பிரிவில் வெற்றி பெற்றார். இவர் அடுத்த ஆண்டு ஜன., மாதம் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். மாணவனை கிருசின்கான் சித்தோரியா கராத்தே பயிற்சி பள்ளி தலைமை பயிற்சியாளர் சென்சாய் முத்துகிருஷ்ணன் மற்றும் பெற்றோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை