உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி சுந்தர்நகர் கழிவுநீர் பாலம் பணிகள் துவங்கியது

பரமக்குடி சுந்தர்நகர் கழிவுநீர் பாலம் பணிகள் துவங்கியது

பரமக்குடி : பரமக்குடி சுந்தர் நகர் வழியில் உள்ள கழிவுநீர் பாலம் இரண்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பணிகள் துவக்கப்பட்டுள்ளன.பரமக்குடி நகராட்சி சுத்திகரிப்பு நிலையம் அருகில் சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியை ஒட்டி கழிவுநீர் பாலம் செல்கிறது. 6 அடி அகலம் கொண்ட இந்த பாலம் 2021 நவ.,ல் நகராட்சி மண் அள்ளும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்த போது இடிந்தது.இதனால் நர்சரி மற்றும் மேல்நிலைப்பள்ளி செல்லும் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் சுந்தர் நகர் செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து தினமலர் நாளிதழில் இதில் உள்ள விபத்து அபாயம் குறித்து செய்தி வெளியிடப்பட்டது.செய்தி எதிரொலியாக ரூ.6 லட்சத்தில் 4.5 மீ.,அகலம் கொண்ட புதிய பாலம் அமைக்க பணிகள் துவங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ